Wednesday, 11 January 2012 0 comments

மரங்கள்

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு..
எவ்வித தேவையும் இல்லை எனக்கு..
என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் 
செய்கிறேன் உனக்கு..
எவ்வித தொல்லையும் கொடுப்பதில்லை நான்...
நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாது..
தெரிந்தும் என்னை வெட்டுகிறாய்...?
நான் இல்லாமல் நீ எப்படி வாழ போகிறாய்...? 
என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்....!
உன் வீட்டு ஜன்னலாக மாறி...!
Tuesday, 3 January 2012 0 comments

இழப்பு


 
புயல் வீசிய பொழுதுகள் எல்லாம்
பூந்தென்றலாய் உன் முகம்.....

வாழ்க்கைப் போராட்டத்தில் 
வழிகாட்டியாய் உன் முகம்.....

துயரங்களில் தத்தளித்த காலங்களில் 
கலங்கரை விளக்காய் 
உன் முகம்..

கட்டுபாடற்று திரிந்த தருணங்களில் 
கடிவாளமாய் உன் முகம்...

இருள் நிறைந்த நேரங்களில்
அகல் விளக்காய் உன் முகம்...

 எத்தனையோ சோதனைகளில் 
உன் முகம் நினைந்து ஆறுதல் அடைந்தேன்...

இன்று 

மறக்க நினைக்கிறேன் 
மரணப் படுக்கையில் இருந்த 
உன் முகத்தை..........

அன்புடன்
நிலா