Friday, 23 December 2011

கவிதையை சுவாசிக்கிறேன்...


திரை போட்டிருக்கும் 
எழுத்து உலகின் 
திரை விலக்கி...........


சமுதாயம், மரபு 
என்னும் 
சங்கிலி அறுத்து.........

உண்மையை உலகிற்கு 
சொல்ல 
அன்றாடம் மனித 
வாழ்க்கையே கவிதையாக்கி ........

எழுதுகிறேன்.........

ஆம் இவை தான் 
என் எழுத்துகள் ..,
இவை தான் என் 
படைப்புகள்..........  

என் படைப்புகளில் 
போலிகள் இல்லை.......
சாயங்கள் இல்லை.....

இல்லாதவற்றை  நான் 
எழுதவும் இல்லை..........

உண்மையை ஏற்று 
கொள்பவர்களுக்கு மட்டுமே 
என் கவிதைகள்......

ஏனென்றால் நீங்கள் 
கவிதையை வாசிக்கிறீர்கள்

நான் சுவாசிக்கிறேன்..................



அன்புடன்,
நிலா

1 comment:

நான் தேன் :) said...

நல்ல கவிதை...! உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்... :)

Post a Comment

உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன !