Saturday, 31 December 2011 1 comments

எழுத்து




கண் மூடிய பொழுதெல்லாம் 

காட்சிகளாய் தோன்றுகிறது....

காட்சிகள் எல்லாம் கற்பனையாய்
விரிகிறது...

கற்பனைகள் எல்லாம் நினைவாக 

நெஞ்சம் துடிக்கிறது....

இதயம் துடிக்கும் பொழுதெல்லாம்

எழுகிறது உன் நினைவுகள்..

இதெல்லாம் காதலின் அறிகுறியோ....!

யோசித்தேன்....!

ஆம் தீராத காதல் தான் எனக்கு....

உன் மீது அல்ல...!

உன் எழுத்தின் மீது.....!


அன்புடன்...

நிலா...

Thursday, 29 December 2011 1 comments

மனிதன்





நீரில் நிறங்கள் இல்லை..
 மரங்களில் பேதமில்லை...

மீன்களில் பிரிவு இல்லை....

பறவைகளில் ஜாதி இல்லை...

மிருகங்களில் வேறுபாடு இல்லை...

மனிதர்களில் மனித நேயமே இல்லை..... 

ஜாதி, மதம், இனம், மொழி....

இவற்றால் வேறுபட்டு கிடக்கும்

நீ  ......

என்று உணர்ந்து கொள்வாய் 

 மனிதன் என்று................!  

அன்புடன்....
நிலா  









Monday, 26 December 2011 0 comments

காதல் !



ஏதோ ஒரு காதலில்

இருந்து தான்....

ஒவ்வொரு கவிதையும்

பிறக்கின்றன.......

ஏனெனில்....

காதல் 

மனிதனை மட்டும்

 தோற்றுவிக்கவில்லை

மனிதத்தையும் தோற்றுவித்தது.......





அன்புடன்,  

நிலா...
Friday, 23 December 2011 1 comments

கவிதையை சுவாசிக்கிறேன்...


திரை போட்டிருக்கும் 
எழுத்து உலகின் 
திரை விலக்கி...........


சமுதாயம், மரபு 
என்னும் 
சங்கிலி அறுத்து.........

உண்மையை உலகிற்கு 
சொல்ல 
அன்றாடம் மனித 
வாழ்க்கையே கவிதையாக்கி ........

எழுதுகிறேன்.........

ஆம் இவை தான் 
என் எழுத்துகள் ..,
இவை தான் என் 
படைப்புகள்..........  

என் படைப்புகளில் 
போலிகள் இல்லை.......
சாயங்கள் இல்லை.....

இல்லாதவற்றை  நான் 
எழுதவும் இல்லை..........

உண்மையை ஏற்று 
கொள்பவர்களுக்கு மட்டுமே 
என் கவிதைகள்......

ஏனென்றால் நீங்கள் 
கவிதையை வாசிக்கிறீர்கள்

நான் சுவாசிக்கிறேன்..................



அன்புடன்,
நிலா